வியாழன், 27 ஏப்ரல், 2017

முதற்றாய்மொழி: சில புரிதல்கள்

முனைவர் த.சத்தியராஜ்
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயமுத்துர் - 28
முன்னுரை
மனிதன் தன்னுடைய செயல்பாட்டை வெளிப்படுத்த/அறிவிக்க மொழி எனும் கருவியைக் கண்டுபிடித்தான். அக்கண்டு பிடிப்பே ஆய்வு சார்ந்தது. ஏனெனில் எடுத்த எடுப்பிலே ஒரு மொழி உடனே மொழியுருவாக்கம் பெறுவது கிடையாது.
இயற்கை விளைவையே முற்றுஞ் சார்ந்த அநாகரிக மாந்தர், மணவுறவும் மகவுவளர்ப்பும் பற்றி நிலையற்ற குடும்ப அளவான கூட்டுறவு பூண்டு வாழ்ந்து வந்தனர். அவர் வாழ்ந்தபோது ஒருவர்க்கொருவர் தத்தம் கருத்தைப் புலப்படுத்த வேண்டியதாயிற்று. அதற்குக் கண்சாடை, முகக்குறிப்பு, சைகை, நடிப்பு, உடலசைவு முதலிய செய்கைகளையும்; உணர்வொலிகள் (Emotional sounds), விளியொலிகள் (vocative sounds), ஒப்பொலிகள் (Imitative sounds), குறிப்பொலிகள் (Symbolic sounds), வாய்ச்செய்கையொலி (Gesticulatory sounds), குழவி வளர்ப் பொலிகள் (Nursery sounds), சுட்டொலி (Deictic sounds) ஆகிய எழுவகை யொலிகளையும்; இயற்கையாகவும் செயற்கையொகவும் ஆண்டு வந்தனர் (ஞா.தேவநேயப் பாவணர், முதற்றாய்மொழி 2009:5).
இக்கருத்தின் அடிப்படையை நோக்கினால் மொழி உருவான முறையை உணர்ந்து கொள்ளலாம். இப்படி உருவாக்கப்பட்ட ஒரு மொழிதான் பின்பு எழுத்துருவாக்கம், சொல்லுருவாக்கம், தொடர் உருவாக்கம் எனப் பலநிலைக் கடந்து செவ்வியல் மொழியாக அடையாளப்படுத்தப்படுகிறது. அது ஏறத்தாழ பல்லாயிரம் ஆண்டுகளுக்குமேல் ஆகியிருக்கலாம். ஒரு குழுந்தைப் பிறந்ததிலிருந்து ஓராண்டுகளுக்குப் பிறகே சில சொற்களைக் கூற தலைப்படுகிறது என்பதை உற்று நோக்கினால் மொழி உருவாக்கத்தினை உணரவியலும். அப்படிப் பல உருமாற்றங்களுக்குப் பிறகு உருவான ஞால முதல்மொழி தமிழ் என இன்று ஆய்வறிஞர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அதற்கு மாறுபட்ட கருத்துகளும் இருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இக்கட்டுரை ஞால முதன்மொழி தமிழ்தான் என்பதை இதுவரை ஆய்ந்த கருத்துக்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முயலுகின்றது.

முல்லைப்பாட்டில் உளவியல்

                                          ஆ.அம்பிகா
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியபள்ளி,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
      சங்கஇலக்கியங்கள் தொன்மையும் பெருமையும் வாய்ந்த உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியாகும். சங்க இலக்கியங்கள் வாழ்வில் நிகழக் கூடியவற்றைக் கற்பனை நயத்துடன், நடப்பியல் சார்த்திக் கூறுவதாகும். ஆனால் உளவியல் என்பது வளரும் அன்புடன் வாழும் மக்களைப் பற்றியதும் அவர்தம் உள்ள நிகழ்வுகளையும், நடத்தை மாறுபாடுகளையும் ஆராய்வதாகும். மனிதனின் வாழ்க்கையில் நிகழும் உளநலத்தைச் சிதைக்கும் சிக்களிலிருந்து ஒருவன்தன் உள்ளத்தை எவ்வாறு தற்காத்துக்கொள்கின்றான் என்பதை முல்லைப்பாட்டில் இடம்பெறும் புறத்தேற்றம் என்னும் தற்காப்பு இயங்குமுறைகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குறுந்தொகையில் உள்ளப்போராட்டம்

                                    ஜெ.ஜென்சிதா,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
இந்திய மொழிகள் மற்றும் ஓப்பிலக்கிய பள்ளி,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
      தமிழ் இலக்கியம் தொன்மையானது, பண்பட்டது, வரலாற்றுச் சிறப்புடையது என்று தோன்றி வளர்ந்தது என்று இயம்பமுடியாத அளவுக்குப் பழமையானது. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியமான சங்கஇலக்கியத்தினை எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் நூல்களாகத் தொகுக்கப்பட்டடுள்ளன. அகமும் புறமும் இதன் உட்பிரிவாகும். இவற்றில் அகநூல்கள் ஐந்து புறநூல்கள் இரண்டும், அகமும் புறமும் கலந்து வருவது ஒன்று. இதைப்போல் தமிழில் இலக்கியம் என்று எண்ணும்போது பல்வேறு சிந்தனைகள் நம் சிந்தனையைத் தொடும். அவற்றில் ஒன்று இலக்கியத்தோடு தொடர்புடைய உளவியல் துறையும் ஒன்றாகும். அவ்வுளவியலில் பல கூறுகளும் கோட்பாடுகளும் உள்ளன. அவற்றில் உள்ளத்தைச் சிதைக்கும் கூறுகளில் ஒன்றாக உள்ளப்போராட்டம் என்ற  உளவியல்கூறு எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில் எத்தன்மையில் இடம்பெற்றுள்ளன என்பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தமிழ்க் கணிமையில் இனி…

இந்தியாவில் இருபத்திரண்டு மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுக்குத் தேவையான மென்பொருட்கள் உருவாக்குவதில் நடுவண்நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. கணினியில் தேவையான தன்னிறைவு பெற்றுவிட்டனவா? இல்லை என்பது விடையாக இருக்கும். சரி, இனித் தமிழ்க்கணிமை குறித்துச் சில எதிர்கால நோக்கங்களை இங்குக் காண்போம்.

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!

நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 (https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html) இற்கான எமது பணியில் "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்தோம். அதற்குத் தனது பதிவை முனைவர் இரா.குணசீலன் அவர்கள் அனுப்பியுள்ளார்.

ஞாயிறு, 26 மார்ச், 2017

தரக்குறியீட்டு எண் பெறும்முறை

முனைவர் .சத்தியராஜ்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (.)
கோயம்புத்தூர் - 641 028
            தரக்குறியீட்டு எண் என்பது என்ன? உலகளாவிய நிலையில் ஒரு நிறுவனத்திற்கோ அல்லது நூலிற்கோ அளிக்கப்பொறும் அடையாளம் எனலாம். இது இப்பொழுது துவையானது. இது கருத்துத் திருட்டைக் குறைப்பதற்கு வழிவகை செய்து தருகிறது. அது ஒருவரின் சிந்தனைத் தரத்தை மேம்படுத்தவும் வழி செய்கிறது. அதனை எவ்வாறு பெறுவது என்பதை இப்பகுதி விளக்குகிறது.

வெள்ளி, 21 அக்டோபர், 2016

செவ்வியல் உலாவி


பதிப்புரை
        இன்று தமிழ் இலக்கியங்கள் மீதான ஆய்வுப் பார்வை விரிந்துள்ளது. நூல் பதிப்புத் தொடங்கி இணையப்பதிப்பு என அதன் தளம் வளர்ந்துள்ளது. அவ்வளர்ச்சியில் இலக்கியப்படியின் (Literary Text) மீதான வாசிப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற வாசிப்பிற்குத் தொடக்க காலத்தில்  (நூலகம் எனும் சிந்தனை உருவான பிறகு) அடிப்படையாக இருந்தது நூலகம் ஆகும். ஆகவே, முதற்கட்டப் பகுப்பு சிதம்பர அடிகள் நூலகத்தை அறிமுகப்படுத்தும் முகமாக இடம்பெறுகின்றது.

SITRITHAZHGAL ULAGAM: டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்

SITRITHAZHGAL ULAGAM: டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்

திங்கள், 20 ஜூன், 2016

speech to text software

             Speech recognition தொழில் நுட்பத்தில் கூகுளுக்கு இணையாக வளர்ந்து வந்து ஆச்சர்யாமூட்டும் சீன நிறுவனம்        

பல மென்பொருள் நிறுவனங்களும்  பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தொழில்நுட்பங்களுள் ஒன்று “பேச்சு புரிந்துணர்வு தொழில்நுட்பமாகும் “(Speech Recognition ).
download (1)கூகுள் , ஆப்பிள், அமேசான்,மைக்ரோசாப்ட் உட்பட அமெரிக்காவில் மட்டும் 26 மென்பொருள் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி புதிய மென் பொருட்கள் வெளியிட்டு வருகின்றன . பேச்சு கட்டளைகள் மூலம் இணையத்தில் தேடும் வசதி நம் ஆன்டிராய்டு கைபேசி , ஐபோன் கைபேசியில் Siri, மைக்ரோசாப்ட்டின்  கார்டானா போன்றவற்றில்  உள்ளதை நாம் அறிவோம். உண்மையில் ஆங்கிலம் தவிர வேறு அனைத்து மொழிகளிலும் கணினியில் தட்டச்சு செய்வது கடினமாகத்தான் உள்ளது. ஆங்கிலத்தில்  26 எழுத்துக்கள். ஆனால் ஆசியாவில் உள்ள ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் ஆனால் ஆசியாவில் உள்ள மொழிகளில் நூற்றுக்கணக்கான எழுத்துக்கள் உள்ளன. இங்கு உள்ள மக்கள் இணைய வெளியில் தேட அவரவர் மொழியில் பேச்சு கட்டளைகளின் மூலம் தேடுவது மிகவும் எளிதாக இருக்கும். இணையவழி தேடுதல் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானம்தான் கூகுள் நிறுவனத்தின் இதயத் துடிப்பு   போன்றது. இதனால் இந்தத் தொழில்நுட்பத்தில்   அக்கறையுடன் செயல்பட்டு வரும்   கூகுள் நிறுவனத்திற்கு  ஆசியாவில் போட்டியாக சீனாவின் பெய்டு (Baidu) நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை வெளியிட்டு வருகிறது.

புதன், 20 ஏப்ரல், 2016

ஆய்வுத்திட்ட உதவியாளர் பணி



                 மொழித்துறை
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர் - 641 028
 

தேதி : 20.04.2016
செம்மொழி ஆய்வுத்திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் கீழ்வரும் தகுதிகள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.
ஆய்வுத்திட்டம் : செம்மொழி ஆய்வுத்திட்டம்
(இந்தி மொழியில் சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகள்)
பணியிடம்          : 1
கல்வித்தகுதி      : இந்தியில் பிரவீன் மற்றும் தமிழில் இளங்கலை
மொழிபெயர்ப்பில் ஆர்வமும் அனுபவமும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி :
முனைவர் இரா. இரமேஷ்குமார்
செம்மொழி ஆய்வுத்திட்ட முதன்மை ஆய்வாளர்
மொழித்துறை
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
                                       கோயமுத்தூர் - 641 028     
குறிப்பு:
        நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது.


ஆய்வுத்திட்ட உதவியாளர் பணி



                  images.jpgimages.jpgமொழித்துறை
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர் - 641 028
 

தேதி : 20.04.2016
செம்மொழி ஆய்வுத்திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் கீழ்வரும் தகுதிகள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.
ஆய்வுத்திட்டம் : செம்மொழி ஆய்வுத்திட்டம்
(திராவிட மொழிகளின் முதல் இலக்கணங்கள் : இலக்கணவியல் நோக்கு)
பணியிடம்          : 1
கல்வித்தகுதி      : தமிழில் முதுகலை (M.A.) அல்லது ஆய்வியல் நிறைஞர் (M.PHIL.)
அல்லது ஒப்பிலக்கியத்துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.PHIL.) பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி :
முனைவர் த. சத்தியராஜ்
செம்மொழி ஆய்வுத்திட்ட முதன்மை ஆய்வாளர்
மொழித்துறை
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
                                       கோயமுத்தூர் - 641 028     
குறிப்பு:
        நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்பட மாட்டாது.


திங்கள், 4 ஏப்ரல், 2016

ஒப்பியல் உள்ளும் புறமும்

வாசித்தால்… வாசிக்கச் சொல்லும்…

பேரா. த. திலிப்குமார்
துறைத்தலைவர்
மொழித்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 28
IMG_1884உலகில் வாழ்தல் என்பது எளிதானது. சிலருக்கு அவர்கள் வாழ்ந்ததற்கான எச்சம் எதுவுமின்றி மறித்துப் போகிறார்கள். எதிர்ப்பிலே வாழுங்கள் என்கிறார் ஓஷோ. இப்படி வாழும் மனிதன் அனுபவங்களோடு வாழ்ந்து பார்க்கிறான். அவன் கதைப்பதற்குக் கொஞ்சம் சொற்கள் இருக்கும். எதுவுமற்ற மனிதன் சொல்லின்றி மறித்துப் போகின்றான்.
மந்தையாய் வாழ்ந்து மடிந்து போகும் மனித சமூகத்தில் படைப்பாளிகளும் திறனாய்வாளர்களும் எதிர்த் திசையில் பயணம் செய்கிறார்கள். அப்படிச் செய்யும் பயணம் புது அனுபவத்தோடு வாழ்வியலைப் பார்க்க நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது.
படைப்பாளிகள் தமது படைப்பின்வழிப் பதிவு செய்யும் பனுவலின் தன்மையைச் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் அமைக்கிறார்கள். அப்படி ஒப்பியல் உள்ளம் புறமும் என்ற நூல் பதினொரு ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட பனுவலாகப் பல வகையிலும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது. இந்நூல் தட்டை மனநிலையிலிருந்து பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு வேறு ஒரு வடிவத்தில் சிந்திக்கச் சொல்லிக் கொடுக்கின்றது.
இலக்கிய வாசிப்பில் போகிற போக்கில் நாம் வாசித்ததைக் கொஞ்சம் நின்று நிதானித்து வாசிக்கும் பொழுது சத்தியராசுவின் வார்த்தைகள் நின்று பார்க்கச் சொல்கின்றன. இதை நாம் இப்படிப் பார்க்கவில்லையே என்று யோசிக்க வைக்கின்றன.
இலக்கியம் நம் இதயத்தோடு இணக்கமாக, நம்மோடு பேசுவது; நம்மைப் பேசாமல் செய்வது; நம்மை எப்பொழுதும் இம்சிப்பது. படைத்தவனின் மனநிலையோடு நாம் பயணிக்க இதுபோன்ற ஆய்வுக்கட்டுரைகள் ஆற்றுப்படுத்தும். விலைமகளிர் நெறிகள் என்ற கட்டுரையை வாசித்தபோது பரத்தை – விலைமகள் இவர்களின் நிலைப்பாட்டை அறியமுடிந்தது. ஓஷோவின் காமத்திலிருந்து கடவுள் வரை என்ற நூலில் இடம்பெறும் காம இன்பம் மனதளவில் ஒரு அங்கம் எனும் கருத்து இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
நமது இலக்கியம் காட்டும் வாழ்வியல் முறையும் பிறமொழி இலக்கியம் சொல்லும் வாழ்வியல் முறையும் உலகளவில் மனித சமூகம் அன்பு என்ற ஒரு புள்ளியை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன.
மாற்றுச் சிறந்தனையாளர்கள் மந்தையாய் அலைந்து திரிந்து மடிந்து போவதில்லை. அவர்கள் இந்தச் சமூகத்திற்குத் தமது வாழ்வில் கண்டவற்றை அடுத்த தலைமுறைக்குப் பங்களித்துவிட்டுச் செல்கிறார்கள். அடர்ந்த இருள்படர்ந்த காடு, செல்லவேண்டிய தூரம் பல காததூரம். நீ கடக்க வேண்டியது வெகுதூரம் ராபர்ட் ப்ராஸ்ட் சொன்ன இந்த வாக்கியத்தை மனதில் கொண்டு சத்தியராஜ் பயணித்துக் கொண்டிருக்கிறார். உன் உச்சத்தை உடனே தொட்டு விடாதே. தொட்டு விட்டோம்னு நினைப்பு வந்துட்டா வளர்ச்சி இல்லைனு பாலுமகேந்திரா கூறுகிறார். உச்சத்தை நோக்கிய பயணம் தொடர வேண்டும்.
வாசிப்பு வசப்பட்டால்தான் ஒப்பியலோடு உறவாட முடியும். அந்த வகையில் இலக்கணத்தில் தனித்துவம், இலக்கியத்தில் தொடர்வாசிப்பு தான் கற்றதையும் பெற்றதையும் சக மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பாங்கு, வார்த்தைக்கு வலிக்காமல் உரையாடும் தனித்தன்மை, தனித்தமிழ் மீது கொண்ட காதல் இவரைச் சரியாக அடையாளம் காட்டும். இப்படித்தான் வாழவேண்டும் எப்படியும் அல்ல என்பதற்கும் எளிமையோடு எல்லோரும் உறவாடுவதற்கும் எளிய மனிதர். இவரது முயற்சி தொடர வாழ்த்துக்கள்.


தோழமையுடன்…
த. திலிப்குமார்
நூலை வாசிக்க ... http://sathiyaraj.pressbooks.com/ இத்தளத்திற்குச் செல்க.

விருதும் நம்மவருக்கு வியப்பும்

 நம் நாட்டில் பல்வேறு விதமான விருதுகள் மாநில மத்திய அரசுகளால் வழங்கப்படுகின்றன. சில விருதுகள் தரப்படுகின்றன. சில விருதுகள் பெறப்படுகின்றன. விருது பெறும் சிலரால் விருதுக்குப் பெருமையும் ஏற்படுகின்றன. வேறு சிலரால் விருதுக்குச் சிறுமையே ஏற்படுகின்றன.

     சிலரை இருக்கும்போது கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இறந்தபின் விருது வழங்கும் கூத்தும் நம் நாட்டில் அரங்கேறும். இராணுவ வீரர்களுக்கு மட்டுமே இத்தகைய இறப்புக்குப்பின் விருது வழங்குவது பொருத்தமாக இருக்கும்.

   பத்ம விருதுகள் என்பவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விருதுகளாகும். இவ் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் அவரவர் துறையில்  தகுதி வாய்ந்த சான்றோர் பெருமக்களாக இருக்க வேண்டும். ஆனால் அதிலும் அரசியல் புகுந்து விட்டது. சில சமயங்களில் இவருக்கா விருது கிடைத்திருக்கிறது என புருவங்களை உயர்த்தி இருக்கிறோம் அல்லவா?

  விருதுப் பட்டியல் வெளியானதும் விமர்சனப் புயல் கிளம்பும். பட்டியல் வெளியானபோது அதில் சாய்னா நேவால் பெயர் இடம்பெறவில்லை. அவர் அழுது புலம்பவில்லை.  மாறாக பத்திரிகையாளர்களை அழைத்துத் தன்னை விருதுக்குத் தேர்ந்தெடுக்காததை எதிர்த்து வினா எழுப்பினார். உடனே தொடர்புடைய  அமைச்சர் சாய்னா நேவாலின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக அறிவித்தார். பத்மபூஷன் விருதினை வழங்கி தேநீர் கோப்பையில் எழுந்த புயலைச் சமாளித்தது நடுவண் அரசு. உலக அரங்கில் இந்தியக் கொடியை உயரத்தில் பறக்கச் செய்யும் சானியா நேவால் விருதுக்குத் தகுதியானவர்தான்.

  
இரு தினங்களுக்கு முன் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. எல்லோரும் விலை உயர்ந்த ஆடை அணிகளை அணிந்து செல்ல ஒருவர் மட்டும் எளிய உடை அணிந்து எவருடைய கவனத்தையும் கவராமல் மேடை ஏறி விருதை பெற்றுக்கொண்டு இறங்கினார். ஒரு கரும யோகியைப் போல  சென்று பய பக்தியுடன் விருதினைப் பெற்றுக் கொண்டார். போட்டோகிராபர்களுக்கு போஸ் எதுவும் தரவில்லை; மற்ற எல்லோரும் போஸ் கொடுக்கத் தவறவில்லை!

     யார் அந்த எளிய மனிதர்? ஒடிசா மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தில் ஓர் ஏழைமையான குடும்பத்தில் 1950 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பிறந்தார். இளமையிலேயே தந்தை இறந்ததால் மூன்றாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டர். பாத்திரம் கழுவும் வேலை பின்னர் ஒரு பள்ளியில் மதிய உணவுப் பிரிவில்  சமையல் வேலை என அவரது வாழ்க்கைச் சக்கரம் உருண்டோடியது. பிறகு அந்தப் பள்ளிக்கு அருகில் ஒரு பெட்டிக்கடையைத் தொடங்கினார். ஓய்வு நேரத்தில் படிக்கவும் எழுதவும் செய்தார். சிறு சிறு கவிதைகளை அவர் தாய் மொழியான கொசாலி மொழியில் எழுதினார். ஒரு பழைய ஆலமரம் என்னும் தலைப்பில் அவர் எழுதிய கவிதை ஒன்று உள்ளூர் நாளேட்டில் அச்சு வாகனம் ஏறியது. தொடர்ந்து கவிதை, கதை, காவியம் என எழுதிக் குவித்தார். நம் ஊர் பாரதிதாசனைப் போல ஒடுக்கப் பட்டவர்களுக்காகக் கவிதை பாடினார்; சாடினார்.

     அவருடைய கவிதைகள் பல்கலைக் கழகங்களில் பாடங்கள் ஆயின. தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் இவரது கவிதைகளை ஆராய்ந்து பிஎச்.டி பட்டங்கள் பெற்றனர். இலக்கிய ஆர்வலர்களின் நிதி உதவியால் அவருடைய எழுத்துகள் நூல்வடிவம் பெற்றன.

   இன்னொரு அசாத்தியமான திறமை அவரிடம் உள்ளது. தான் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களை ஒரு பிழையில்லாமல் மணிக்கணக்கில் சொல்கிறார்.

    இவரின் அடியொற்றி, எளிய அதே சமயம் காரசாரமான கவிதை எழுதும் இளங்கவிஞர் பட்டாளம் உருவானது. ஆனாலும் அரசுத் தரப்பில் எந்த அங்கீகாரமும் இல்லை. திடீர் என ஒருநாள் இலண்டன் பிபிசி காரர்கள் காமிராவும் கையுமாக வந்து இவரைப் பற்றி ஒரு  செய்திப் படத்தைத் தயாரித்து இவரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள்.. பிறகுதான் நம்மவரின் அருமை அரசுக்குத் தெரியவந்து பத்ம ஸ்ரீ விருதுக்குப் பரிந்துரைத்தது.

    இப்படியாக பத்ம ஸ்ரீ விருது தகுதியான ஒருவரின் கரங்களில் தவழ்ந்து தனக்குப் பெருமையத் தேடிக்கொண்டது.

   கல்யாண சந்தடியில் தாலிகட்ட மறந்த கதையாக, இந்த விருது புராணத்தில் கதா நாயகரின் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

  அவருக்கு ஒரு மகள் உள்ளாள்; மனைவியின் பெயர் மாலதி.

சரி சரி அவருடைய பெயர் என்ன என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

ஹால்தார் நாக் என்பது அவர் பெயராகும்.

அவர் சொல்கிறார்: “ஒரு வகையில் எல்லோரும் கவிஞர்களே. தாம்  எழுதும் கவிதைகளுக்கு வடிவம் கொடுப்பதில்தான் வேறுபடுகிறார்கள்.”

நன்றி :
http://iniangovindaraju.blogspot.in/2016/03/blog-post_31.html?showComment=1459762944750#c7743307853064190269