சனி, 22 பிப்ரவரி, 2014

மதிப்புரை: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு


மு. அய்யனார்
முனைவர் பட்ட ஆய்வாளர்
பெரியார் உயராய்வு நடுவம்
பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சி -24
தமிழில் அகமரபு இலக்கியத்திற்கென்றே தனித்ததொரு மரபினைக் கொண்ட குறுந்தொகைப் பாடல்களையும் பழம் மொழிகளில் ஒன்றான பாலிமொழி இலக்கியமான பிராகிருதத்தில் இருந்து உருவாக்கப்பட்ட காதா சப்த சதியையும் ஒப்பிட்டுச் சிலகூறுகளைக் கட்டுரையாளார் முன்வைத்திருப்பது தமிழாய்வின் தேவைகளுக்குப் பயனளிக்கும் முயற்சியே ஆகும். அ. செல்வராசுவின் காலம் சுட்டிக்காட்டலில் நிலவும் மயக்கநிலையைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளார், சங்கச் செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையையும் காதா சப்த சதியையும் ஒரே காலத்தன என்னும் கருத்தியலை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார். குறுந்தொகை தமிழில் இயற்றப்பட்ட அகநூல்களில் பெரும்பெயர் கொண்ட இலக்கியமாக விளங்குவது காதா சப்த சதி பாலி மொழியில் விளங்கிவந்த ஒரு பழம்பெரும் இலக்கியமாகும். கட்டுரையாளார் இரண்டிற்குமான சிறப்புகளை விளக்கும் பொழுது சில ஒற்றுமை வேற்றுமைகளை முன்வைக்கிறார். இவற்றைக் காலக் கணிப்புச்செய்கையில் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு,

புதன், 29 ஜனவரி, 2014

கழார்க்கீரன் எயிற்றியார் காட்டும் பிரிவு


                                                                   குபேந்திரன்
                                                                       இளம் ஆய்வாளர்
                                                                       அழகப்பா பல்கலைக் கழகம்
                                                                       காரைக்குடி
முன்னுரை
          சங்க இலக்கியங்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். சங்க காலப் புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கழார்க் கீரன் எயிற்றியார் ஆவார். பெண்பாற் புலவர்களில் ஒருவரான இவர் வேட்டுவக் குடியினைச் சார்ந்தவர். இவர் 'கழாஅர்' என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் இவ்வூர் தற்பொழுது தஞ்சை மாவட்டத்திலுள்ள  திருக்களார் என்றும் சோழர் படைத்தலைவராகிய கீரன் இவர்தம் கணவர் என்பதும் இவரைப் பற்றிய குறிப்புகளாகும். வேட்டுவக்குடியைச் சார்ந்த இப்புலவரின் பாடல்கள் வழி இவர்தம் தனித்தன்மையைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்


முன்னுரை
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
தமிழ் நெடுங்கணக்கு:  தமிழ் மொழிக்குரிய நெடுங்கணக்குகள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தியேழு என ஆரம்பக்கல்வியில் புகட்டப்படுகின்றது; புகட்டப்பெற்று வருகின்றது. இந்நெடுங்கணக்குகளை மரபிலக்கணிகள் முதல், சார்பு எனப் பிரித்துப் பார்க்கின்றனர். இவற்றுள் முதலெழுத்து விளக்கமுறைகளில் மரபிலக்கணிகளிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. அஃதியாங்கெனின் தொல்காப்பியர் சார்பெழுத்துகள் (ஆய்தம், உயிர்மெய்) எனக் கருதியதை, முதல் எழுத்துகளுடன் இணைத்துப்பார்ப்பதேயாம்.
பதிவுகள் இதழில் 2014 சனவரித் திங்கள் 19ஆம் நாள் வெளியிடப் பெற்றது.

கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு

1.0. முன்னுரை
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் சமகாலத்திய இலக்கியங்களாகக் கருதப் பெறுகின்றன. இவ்விரு இலக்கியங்களில் முறையே 312, 189 என்ற இருபாடல்கள் ஒத்த கருத்துடையவை. இருப்பினும் அவ்விரு பாடல்களின் காலம் மட்டும் தான் மாறுபடுகிறது என்பார் அ. செல்வராசு (2008:37). ஆனால் அது களவு, கற்பு குறித்த காலமா? அல்லது பாடல் எழுதப்பட்ட காலமா? எனத் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அவ்விரு பாடல்களில் நிலவும் அவ்விரு கவிஞர்களின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

அவ்விரு கவிஞர்களின்  சிறப்புகளை,
1. ஒத்த தன்மை: தலைவியின் நுண்ணறிவு

2. வேறுபட்ட தன்மை: சமகாலத்தியப் பதிவுகள்   என்றாயிரு வகைகளில் விளக்கலாம்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

களாபூரணோதயத்தில் உவமைகள்

                                                                                                                                - இரா. நித்யா
1.0 முன்னுரை
தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2.0 பிங்களிசூரனாரும் களாபூரணோதயமும்
தெலுங்கு இலக்கிய பிரபந்தங்களின் வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கிருட்டிணத்தேவராயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவரும், இங்கிலாந்தைச் சார்ந்த  சேச்சுப்பியருக்குச் சமகாலத்தவரும் ஆவார். அவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரானாலும் வைணவக் கருத்துகள் மிகுந்த களாபூரணோதயத்தை (திருமாலை வழிபடக்கூடிய கிருட்டிணத்தேவராயரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது) எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் தெலுங்கில் பிரபலமாக இருந்த கவிதைப்போக்கு பிரபந்தம் இயற்றுவதாகும். இது இலக்கியத்தின் உயிர்நாடி போன்றது. இதனை இயற்றுவதில் அட்டதிக்கசங்கள் (எண்திசைப் புலவர்கள்) என்றழைக்கப்பட்ட புலவர்களே சிறந்து விளங்கினர். அவ்வட்டதிக்கசங்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் இராகவபாண்டவியம் (சிலேடைக் காவியம்), பிரபாவதி பிரத்தியுமனம், களாபூரணோதயம் ஆகிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார்.
மேலும் வாசிக்கhttp://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1840:2013-11-23-05-28-07&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19 (பதிவுகள் இதழில் வெளியிடப்பெற்ற கட்டுரை)

வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெலுங்கு மரபிலக்கணங்களில் இலக்கணக்கலைச் சொற்கள்

            தெலுங்கு இலக்கணங்கள் கலைச் சொற்களுக்குப் பருந்துப் பார்வை பாரிபாஷிக பதாலு, சஞ்ஞாலு என இரு சொற்களைப் பயன்படுத்தியுள்ளன. அவ்விலக்கணங்களில் காணப்படும் கலைச் சொற்களை மூன்று வகையாகப் பிரித்துக் கூறலாம். அவை : -
1.    சமற்கிருத பிராகிருத மொழிக்குரியன
2.    தூய தெலுங்கு மொழிக்குரியன
3.    மணிப்பிரவாள நடை
1.    சமற்கிருதத்தில் தோன்றிய தெலுங்கு இலக்கணங்கள்
            சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தெலுங்கு மொழிக்கான இலக்கணங்களின் அமைப்பு முறை சுலோக வடிவில் காணப்படுகிறது. இவ்வமைப்பு முறையில் வரும் முதல் இலக்கணம் ஆந்திர சப்த சிந்தாமணி.

வெள்ளி, 29 நவம்பர், 2013

திருவள்ளுவரும் கிரேக்க அறிஞர்களும் [சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ]

முன்னுரை
உலகில் உணர்வு ஒன்றுபடும் நிலையில் ஒத்த கருத்துக்கள் ஒருங்கே மலர்ந்து எங்கும் மணம் பரப்புதல் இயல்பாதல் உண்டு. மொழி வேற்றுமையும்  திசை வேற்றுமையும் பாராது மக்கள் கலந்து பழகிய பாங்கினாலும், படித்த மேதைகளுக்கிடையே நிகழ்ந்த அறிவுப் பரிமாற்றத்தாலும், அரசியல் வாணிபத் தொடர்புகளாலும், சமயச் சார்பாலும் வேற்றுமைக்கிடையில் ஒற்றுமை காணும் உணர்வு இவ்வுலகில் வளர்ந்து வருவதைக் காணலாம். மனிதகுல வாழ்க்கைக்குத் தேவையான நல்வழி கருத்தியல்களைக் குறித்து சமய தத்துவ ஞானிகள் ஒருபுறமும், இலக்கண இலக்கிய மேதைகள் மறுபுறமும் விளக்கமாகவும், குறிப்பாகவும் கூறிச் சென்றுள்ளனர். இங்குத் திருவள்ளுவரின் பொதுநலச் சிந்தனைகளோடு, கிரேக்க அறிஞர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர்களின் பொது நலச் சிந்தனைகளை ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புதன், 20 நவம்பர், 2013

எதற்கு?

                                                                                                                                  - த. சத்தியராஜ்
கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் புரட்சி மிகுந்த சிந்தனைகளைத் தெலுங்கு மக்களிடையே பரப்பி வந்தார் வேமனா. இவரின் சிந்தனைகளை அறியாத தெலுங்கரே இல்லை எனலாம் என்பர். அந்த அளவிற்கு அவருடைய கருத்துகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. அவர் சிறந்த ஞானியாகவும் திகழ்ந்துள்ளார்.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கேடு


முகப்பு
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
அறம் பாடுவதில் திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் திருவள்ளுவர் (தமிழ்), வேமனா (தெலுங்கு), சர்வக்ஞர் (கன்னடம்) ஆவர். இவர்கள் பொதுமானுட வாழ்வைப் பாடுவதில் தலைசிறந்து விளங்கினர். அவர்கள் முறையே கி.மு., கி.பி.17, கி.பி.15 ஆகிய காலங்களில் வாழ்ந்தவர்கள். அம்மூவரும் ஊர் ஊராகச் சுற்றி மக்களிடையை அறக்கருத்தியல்களை வலியுறுத்தியவர்கள் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

அம்மும்மூர்த்திகளுள் கேடுகள் தரக்கூடிய செயல்பாடுகளைப் பிறவற்றுடன் உவமைப்படுத்திக் கூறும் போக்கு திருவள்ளுவரிடமும் வேமனவிடமும் காணப்படுகின்றது. ஆனால், அக்கேடுகள் எவை என நீண்டதொரு பட்டியலைத் தருவதில் சர்வக்ஞர் திகழ்கிறார். அவ்வாறு திகழ்வதற்கும் ஒரு காரணம் உண்டு. கேடுகளாக அறியக்கூடியவற்றை அனைத்தையும் உவமைப்படுத்திக் கூறினால் அது விரியும். ஆகையால் அவர் சுருக்கித் தொகுத்து விளக்கியுள்ளார். இத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

சனி, 9 நவம்பர், 2013

தாயின் கண்ணீரும் குமுறலும்


பாலூட்டி சோறூட்டி 
தாலாட்டி சீராட்டி 
என் செல்லத்தை வளர்த்தேனடா 
இழவுக்குப் போய் திரும்ப 
இழவடா எம் இல்லத்து 
மானத்தைப் பறித்த கயவனே 
உயிரையும் அல்லவா பறித்திட்டாயடா 

சனி, 2 நவம்பர், 2013

விழாவா? உடல் நலமா?

சுவாசத்துக்குக் கேடு
செவிக்குக் கேடு
திடமனத்திற்குக் கேடு
காற்றுக்குக் கேடு
பட்டாசெனும் வெடியாம்! - அதை

சில்லரை மனிதனடா

எனக்குத் தீபஒளி
ஈழத்தில் வசிக்கும் எம் சொந்தத்திற்கோ
தீராவலி
நான்வேறு அவன்வேறு பிரிக்கவில்லை
மனித உயிர்களை மதிக்கத் தெரியாத பாவிகளே
தமிழனின் ராட்சத உயிர்களை

அவனின் உருவாக்கம்

அவனின் எல்லையிலாக் காதல்
அவனை உருவாக்கியது
குற்றமுள்ள மனிதர்களால் கிளித்தெரியப்படவில்லை
பாலைவனத்தில் வீசும் காற்றினால் சுத்தம் செய்யப்படவில்லை

சனி, 26 அக்டோபர், 2013

கடிகாரம்


மூலம்: கன்னடம் (தினகர தேசாயி)
தமிழில்: சே. முனியசாமி
                
நேரத்துக்குச் சொந்தமே கடிகாராம்
வெள்ளியின் நிறத்து வட்ட உருவமே
நேரத்தை அறிவதற்கு நீ ஆதாரம்
டிக் டிக் நண்பனே டிக் டிக் டிக்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

ஆதிகவி பம்பா

மூலம்: கன்னடம்
தமிழில்: சே. முனியசாமி
இந்தியாவில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. பல மொழிகள் காணப்படினும் அதில் சிறப்பு வாய்ந்தவை சிலவே. ஏனெனில் பல மொழிகள் பேச்சுமொழிகளாக  காணலாகின்றன. இத்தகைய மொழிகளுக்கு   எழுத்து வடிவம் இல்லை. திராவிட மொழிகளுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனிச்சிறப்பு உண்டு.  இம்மொழி  கர்நாடக மாநிலத்தில் பேசப்படுகிறது. இக்கன்னட மொழியில் பழமை வாய்ந்த இலக்கிய இலக்கணங்கள் மிகுந்து காணலாகின்றன. இருப்பின் அம்மொழியின் முதல் கவியாக திகழ்பவர் பம்பா.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஒன்பான் துளைகள்

நம் உடலில் ஒன்பது வகைத் துளைகள் உள்ளன. அவை:

  1. கண் - 2
  2. காது - 2
  3. மூக்கு
  4. வாய்
  5. குதம்
  6. குய்யம்
  7. கொப்பூழ்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டம் - புலவர் செ.இராசுவின் வரலாற்றுப் பார்வை

   வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகள் வரலாற்றில் போதுமான அளவு இடம்பெறவில்லை. அக்குறையை நீக்கித் தமிழ் வளர்ச்சியில்  ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றி புலவர் இராசு அவர்கள் ஈரோடு மாவட்ட வரலாறு என்ற சிறப்பு மிக்க படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.  இந்நூல் தமிழக வரலாற்றில் தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு என்ன? என்பதையும், அக்காலத்தில் தமிழ்ச்சூழல், தமிழின் வளர்ச்சி நிலை ஆகியவற்றைத் தெளிவாகவும், விரிவாகவும் சங்ககாலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

வியாழன், 17 அக்டோபர், 2013

மனநோய்

                                                                                                  - த. சத்தியராஜ்
    இவ்வுலகில் வாழும் மனிதர் அனைவரும் மனநோய் உடையவர்களே. அந்நோயின் வெளிப்பாடு அவரவர் விருப்பத்திற்கேற்ப அமையும். அவ்விருப்பம் மட்டுமே மனநோயாகாது. தற்சிந்தனையின்மையும் அதன்பாற்படும் என்பது தெலுங்குக் கவிஞர் வேமனாவின் எண்ணம். அவர்,