ஸ்ரீபுரந்தரதாசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீபுரந்தரதாசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜூன், 2017

ஸ்ரீபுரந்தரதாசர்

மூலம் - கன்னடம்
தமிழில் - சே.முனியசாமி

      புரந்தரதாசர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் வைணவ பக்தர். புரந்தரகடா எனும் ஊரில் பிறந்தவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் இயற்பெயர் ஸ்ரீநிவாச நாயக்கர் ஆகும். இவர் ஒரு இரத்தின வியாபாரி. ஸ்ரீநிவாசநாயக்கர் புரந்தரதாசர் என மாற்றம் பெற்றதற்கு கதை ஒன்று உள்ளது.
      ஸ்ரீநிவாசநாயக்கர் பெரிய செல்வந்தர். ஆனால் பெரும் கஞ்சன். தானம் தர்மம் என ஏழைகளுக்கு ஒரு பிடி காசுக்கூட கொடுக்காதவர். இவருடைய மனைவி சரசுவதிபாய். இவள் கடவுள் பக்தி மிக்கவள்.