முனைவர் சி.சாவித்ரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முனைவர் சி.சாவித்ரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெலுங்கு மரபிலக்கணங்களில் இலக்கணக்கலைச் சொற்கள்

            தெலுங்கு இலக்கணங்கள் கலைச் சொற்களுக்குப் பருந்துப் பார்வை பாரிபாஷிக பதாலு, சஞ்ஞாலு என இரு சொற்களைப் பயன்படுத்தியுள்ளன. அவ்விலக்கணங்களில் காணப்படும் கலைச் சொற்களை மூன்று வகையாகப் பிரித்துக் கூறலாம். அவை : -
1.    சமற்கிருத பிராகிருத மொழிக்குரியன
2.    தூய தெலுங்கு மொழிக்குரியன
3.    மணிப்பிரவாள நடை
1.    சமற்கிருதத்தில் தோன்றிய தெலுங்கு இலக்கணங்கள்
            சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தெலுங்கு மொழிக்கான இலக்கணங்களின் அமைப்பு முறை சுலோக வடிவில் காணப்படுகிறது. இவ்வமைப்பு முறையில் வரும் முதல் இலக்கணம் ஆந்திர சப்த சிந்தாமணி.