தாமோதரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாமோதரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 மே, 2014

தாமோதரர்கள்


கள் எனும் ஈற்றை இணைத்து தாமோதரர்கள் எனத் தலைப்பிட்டமையின் காரணம் என்னவெனின் தமிழின் குறுந்தொகையில் தாமோதரனார் பெயருடைய புலவரும், பிராகிருதத்தின் காதா சப்த சதியில் தாமோதரன் பெயருடைய புலவரும் இடம்பெறுவதேயாம். இவ்விரு மொழிப் புலவர்களும் பெயரளவில் ஒப்புமையுடையவர்கள். ஆயின் அவ்விருவர்களின் பாடல்களிலும் ஒருமித்த சிந்தனைகள் நிலவுகின்றனவா? என இக்கட்டுரை நோக்குகின்றது.
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இணையுற ஓங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே   – குறுந். 92