செவ்வாய், 22 செப்டம்பர், 2015

வகை(5) இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதைப் போட்டி - 2015



கல்வி ஊற்றே சிந்தை ஊக்கும்!

(வெண்பா – வேறு)
1.      கணித்தமிழ்க் கல்வியைக் கற்றுக் கொடுக்க
கணித்தல் இலாது கணநேரம் தூங்கும்
ஒருகுழு நோக்கா ஒருகுழு பேசும்
புருவம் உயரா புகழ்!                               
(அறுசீர் விருத்தம் – வேறு)
2.      கணினிக் கலையை நோக்க கலைக்கல் லூரி நாடு!
கணித அறிவி யல்தீ கணினி வழியில் பற்று!
கண்ண ழகியாம் கன்னி கண்ணி விழியால் ஈர்க்கும்
உண்ணல் மறக்கத் தூர்க்கும் ஊன்றும் கலையும் நோக்கு! 

3.      இளைஞ இதுகேள்! உன்னின் இளமை நழுவா தாக
சுளைக ளதுவாய் நூலே சுகமாய் அழகாய் நாட்டும்!
அதனை உணர்ந்து ஆக்க அருமைத் தமிழைக் கற்க!
இதனால் உனையும் போற்றும் இனிய புவியார் காணே!

4.      நூலும் உன்னைத் தூண்டும் நூறு மேதை நோக்க!
நாலும் இரண்டும் நன்றே நாளும் புதுமை ஊறும்
வீழும் கெட்ட சிந்தை வீறு கொண்டு ஏற்க!
குழுவும் மகிழும் உந்தன் குடியும் வலையும் நோக்கு!

(வெண்பா – வேறு)
5.      அறிவின் மகனே அழகுச் சமூகம்
பொறிவைத்து உன்னைப் பொசுக்குமே கோட்பாடாய்
மெல்ல உடைத்து வெளியேறு சிந்தையால்
மெல்ல நடக்குமே மெய்!                                      

6.      வெற்றிக் களிப்பிலே வேம்பினிய தீந்தமிழைப்
போற்றிக் கணித்தமிழாய்ப் பொன்போல் பொலிய
வலைப்பூ தொடங்கு! வணங்கும் புவியார்
சிலைவடிக்கும் சிற்பியாய்ச் சேர்!                      

முனைவர்  த.சத்தியராஜ் (நேயக்கோ),
                                                          தமிழ் - உதவிப் பேராசிரியர்,
                                                            இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
                                                                    கோவை – 640 028,
 தமிழ்நாடு, இந்தியா,
                                                                    9600370671


உறுதிமொழி:
       
        கல்வி ஊற்றே சிந்தை ஊக்கும்!  எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்.

7 கருத்துகள்:

  1. வெண்பாவும் விருத்தமும் நன்பாக்களே.. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் !
    தங்களின் வெண்பாவினையும் விருத்தினையும் கண்டு மகிழ்ந்தேன் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன