ஞாயிறு, 4 மே, 2014

தொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு


தமிழில் தொல்காப்பியமும், தெலுங்கில் பாலவியாகரணமும் அவ்வம்மொழிகளைக் கற்கும் மாணவர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் வாசிக்கப்படுவன; வாசிக்கப்பட்டும் வருவனவாம்.  தொல்காப்பியம் கி.மு.5ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றது. பாலவியாகரணம் கி.பி.1858ஆம் ஆண்டு வெளிவந்த நூலாகும். இவ்விரு நூல்களும் காலத்தால் மிகவும் வேறுபாடுடையன. இருப்பினும் வெவ்வேறு மொழிகளுக்குரிய இலக்கணங்கள் என்பதால் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்விரு நூல்களில் காணலாகும் கலைச் சொற்கள் குறித்து ஒப்பிட்டு விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

பெறுநர் என்ற சொல் எவ்வாறு உருப்பெற்றது. அது பெறு எனும் அடிச்சொல்லுடன், அர் எனும் பலர்பால் ஈறு இணைய பெறுநர் என்றாயிற்று. இம்மாற்றத்திற்கு எவ்வாறு பொதுப் பெயரிடுவது. அவ்விரு சொற்களும் ஒன்றோடொன்று இணைவது, ஆணும் பெண்ணும் இணைவதற்கு ஒப்பாகும். அதனைப் புணர்தல் என்பர். அதன் அடிப்படையில்தான் அதற்குப் புணர்ச்சி எனும் கலைச்சொல் (பொதுப்பெயர்) உருவாகியிருக்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு கலைச்சொற்களும் உருவாயிருக்கக் கூடும் என எண்ணுவதற்கு இடமளிக்கின்றது. இக்கலைச்சொற்கள் ஒரு கருத்தைப் புரிந்து கொள்வதற்கான குறியீடு. இக்குறியீட்டைப் பயன்படுத்தியே பல விளக்கங்கள் விதிகளாக அமைகின்றன.
மேலும் வாசித்திட http://www.muthukamalam.com/essay/literature/p65.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன