ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

ஆய்வு செய்யப்பெறாத கல்வெட்டு


  இராமநாதபுரம் மாவட்டத்தில் மேலமடை எனும் ஊர் உள்ளது. இவ்வூரின் வயல்பகுதியில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இருப்பினும் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றது. இவ்வெழுத்துக்கள் முழுமையும் சிதைந்து விடுவதற்குள் அக்கல்வெட்டு தரக்கூடிய செய்தியை வெளிக்கொணர வேண்டும் என்பதே எம் நோக்கம்.
     அக்கல்வெட்டு குறித்த சில தகவலைக் காண்போம். இக்கல்வெட்டில் இடம்பெறும் எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்பொழுது சேதுபதி மன்னர் காலத்துக்கு முன்போ அல்லது பின்போ எழுதப்பட்டதாக இருக்கலாம். இக்கல்வெட்டு இரண்டரை அடி நீளம் கொண்டதாகவும், சற்று சாய்ந்த நிலையிலும் காணப்படுகிறது. அதனுள் சூலாயுதம் படமும் அதற்குக்கீழூம், அக்கல்லின் பக்கவாட்டிலும் அவ்வெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இது அவ்வயலின் நடுவில் உள்ளது. அக்கல்வெட்டு இருந்த இடம் முன்பு மேடாகவும், தற்பொழுது அம்மேடுகள் அகற்றப்பட்டு வயலாகவும் காட்சித் தருகிறது. எனவே கல்வெட்டு ஆராய்ச்சியில் நாட்டமுடையவர்கள் அக்கல்வெட்டுத் தரும் தகவலை வெளிக்கொணர்வார்களாக! இக்கல்வெட்டுக்கு அருகில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதும் கவனத்திற்குரியது.

தகவலாளர்: திருமதி. த. சத்தியராணி நம்பிராஜன்

     இங்கு இடம்பெறும் ஒளிப்படங்கள் நேரில் சென்று கைப்பேசியில் பதிவு செய்யப் பெற்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன