புதன், 28 ஆகஸ்ட், 2013

இலக்கண ஆய்வாளர்களின் கவனத்திற்கு

    ...மொழிக் குடும்பங்களின் அங்கங்களை ஒப்புமைப்படுத்தி மூல மொழியைக் கணுதல்(ப:V,  முதல் பதிப்பின் முன்னுரை)

    ...அந்தக் காலத்தில் ஒலி ஒப்புமை உடைய இரண்டு ஒலிகள், துணை நிலை வழக்கில் இருந்தாலும் புணர்ச்சியில் வேறுபாட்டால், புணர்ச்சி எளிமைக் கருதி தனித்தனி ஒலியன்களாகக் கருதலாம்; தொல்காப்பியர் அப்படித்தான் தமிழ்மொழி அமைப்பில் விளக்கியிருக்கிறார் என்றும், அந்த முறை பிறமொழிக்கும் பொருந்தும் என்றும் கூறுவதோடு, வேறொரு மொழிக்குப் பொருத்திக் காட்டி, இதனால் இலக்கணத்தில் எளிமை ஏற்படுகிறது என்று ஒருவர் கட்டுரை எழுதியிருந்தால், தொல்கப்பியத்துக்கும் உலகப் புகழ் ஏற்பட்டிருக்கும்; அந்தக் கட்டுரையாளரும் நல்ல மொழியியல்வாணர் என்ற புகழ் பெற்றிருக்க முடியும். இன்னும் அப்படிப்பட்ட கருத்துக்கள் - மொழியியலில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு தரும் செய்திகள் தமிழ் இலகணத்தில் இருக்கிறது என்று யாராவது மெய்ப்பிப்பார்களானால், தமிழ் இலக்கணங்களைக் கற்க உலக மொழியியலாளர்கள் ஓடிவருவார்கள்; தமிழ் இலக்கணங்களுக்கும் சர்வ தேசப் புகழ் தேடிவரும்(பக்.9-10)

      இலக்கணம் ஏன் எழுதப்பட்டது? இலக்கண ஆசிரியனின் மொழி உணர்வு; சமூக உணர்வு என்ன? இலக்கண ஆசிரியன் கையாண்ட தரவுகள் எப்படிப்பட்டவை? அவனுக்குப் பிறமொழித் தெரியுமா? அவன் அந்த மொழியைப் படிக்கவேண்டிய அவசியம் என்ன? என்று சமூகவியல் நோக்கிலும் வரலாற்று நோக்கிலும் விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.

  இலக்கணப் பதிப்பு வேலைகள் விஞ்ஞான ரீதியில் இன்னும் தொடங்கவில்லை; உரையாசிரியர்களின் உரை சரியா? தவறா? என்ற கேள்விகளைக்கேட்டுப் பதில் சொல்வதில்தான் பெரும் பகுதி முதலில் செலவழிக்கப்பட்டது. ஒவ்வொரு உரையாசிரியரும் எழுப்பிய புதிய கேள்விகள் என்ன? அவர்கள் கேள்விகளிலும் பதில்களிலும் புதைந்துள்ள உணர்வுகள் என்ன? போன்ற கேள்விகள் கேட்கப்பட வேண்டும். வரலாற்று உணர்வு ஏற்பட்டதும் உரை நூல்கள் மொழி வரலாற்றை அறிந்து கொள்ளவும் உரையாசிரியர்களின் தனி இலக்கணக் கோட்பாடுகளை ஆராயவும் பயன்படுத்தப்பட்டன. உரையாசிரியர்கள் எந்த நோக்கில் ஏன் உரை எழுதியுள்ளார்கள்? அவர்களுடைய சமூக உணர்வு மொழியுணர்வு என்ன? என்றெல்லாம் உரைகள் ஆராயப்படவேண்டும். இதனால் இலக்கண உரைக் கல்வியும் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டே இருக்கும்; இருக்கவும் வேண்டும்(ப.23).  

பார்வை: சண்முகம் செ.வை., 2001, எழுத்திலக்கணக் கோட்பாடு, உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம், சென்னை.    

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள்

                                                                                                           -       . சத்தியராஜ்
சங்க இலக்கியத்தில் யானை பற்றிய பதிவுகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. அவற்றுள் குறுந்தொகையில் அமைந்துள்ள யானை பற்றிய பதிவுகளை மரபுநிலை அடிப்படையிலும் படைப்புநோக்கு அடிப்படையிலும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
முன்னாய்வு
      சங்க இலக்கியதில் விலங்கின விளக்கம் எனும் தலைப்பின்கீழ் விலங்குகளின் உடலுறுப்பு, உணவுமுறை, வாழுமிடம், அவற்றின் செயல்பாடுகள் ஆகியனவற்றை மிக விரிவாக பி.எல். சாமி எடுத்தியம்பியுள்ளார். அவர் விலங்கு நூலார் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார். அவற்றுள் குறுந்தொகையில் 19 இடங்களில் அமைந்துள்ள யானை பற்றிய பதிவுகளைக் கூறியுள்ளார். அவ்வாய்வின் தொடர்ச்சியாக குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள யானை பற்றிய பதிவுகளை மரபுநிலை மற்றும் திணைப்பகுப்பு அடிப்படையில் வகைப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள்
குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள் 64 இடங்களில் அமைந்துள்ளன. அப்பதிவுகளை மரபுநிலை அடிப்படையில் பின்வருமாறு வகைப்பாடு செய்யலாம். அவை,
·         பொதுப்பெயர்(யானை)
·         இளமைப்பெயர்(கன்று, குழவி)
·         ஆண்பாற்பெயர்(களிறு, வேழம்)
·         பெண்பாற்பெயர்(பிடி, பெட்டை)
பொதுப்பெயர்(யானை)
            கன்று, பிடியென பால்வேறுபாட்டுடன் குறிக்கும் பெயர்கள் யானைக்கு உண்டு. இருப்பினும் யானை எனப் பொதுவாக அழைக்கும் பழக்கம் இன்றுமட்டுமல்லாது சங்கப் புலவரிடமும் அமைந்துள்ளது. அதனடிப்படையில் முப்பது(30) இடங்களில் யானை பற்றிய பதிவுகள் அமைந்துள்ளன. அவற்றைத் திணை அடிப்படையில் பின்வருமாறு வரைபடமாக்கலாம்.
                                                                                     பொதுப்பெயர்(யானை)
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
1:2,13:1,36:2, 54:3,119:2,129:6,136:3-4,141:4,142:4,161:7,170:3,179:6,247:5,284:1,333:2,357:6

279:6
34:5,75:3,169:1,258:4,359:4
77:4,79:1,232:3-5,255:4-5,260:5-7,331:4,343:2,348:2,388:4-6
இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 16 இடங்களிலும், முல்லைபாடல்களில் ஓரிட்த்திலும், மருதப்பாடல்களில் 5 இடங்களிலும், பாலைப் பாடல்களில் 9 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. நெய்தல் பாடல்களில் யானை பற்றிய பதிவு இடம்பெறாமைக்குத் திணைசார் வாழ்வியலே காரணமாக அமையலாம்.
இளமைப்பெயர்(கன்று, குழவி)
            பார்ப்பு, பறழ், குட்டி, குருலை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்ற ஒன்பதும் இளமைப் பெயர்கள் என்பர் தொல்காப்பியர். அவற்றுல் யானைக்குரிய இளமைப் பெயர்களை,
            யானையுங் குதிரையும் கழுதையும் கடமையும்
            மானோ டைந்தும் கன்றெனற் குரிய                      – தொல்.பொருள். 559
என்றும்,
            குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை           – தொல்.பொருள். 563
என்றும் சுட்டுவார். இவற்றால் கன்றும் குழவியும் யானைக்கு இளமைப் பெயர்கள் என்பது பெறப்படும். இவ்விளமைப்பெயர்கள் குறுந்.225:1-2, 394:1 ஆகிய இரு இடங்களில் காணப்பேறுகின்றன. இவ்விரு அடிகளும் தலைவனை இயற்பழிக்குமுகமாக இடம்பெற்றுள்ளன. அப்பாடலடிகள் வருமாறு:
            கன்றுதன் வயமுலை மார்ந்த
            தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட!      – குறுந்.225:1-2
            முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி – குறுந்.394:1
என்ற அடிகள் சுட்டும்.
ஆண்பாற்பெயர்(களிறு, வேழம்)
            ஆண்பாற்பெயர்களாக எருது, ஏற்றை(ஏறு), ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதல், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பனவும் பிறவும் அமையும் என்பர் தொல்காப்பியர். அவற்றுள் களிறு யானைக்குரிய ஆண்பாற்பெயராக அமையும் என்று பின்வரும் நூற்பாவில் கூறியுள்ளார். அந்நூற்பா வருமாறு:
            வேழக் குரிதே விதந்துகளி றென்றல்                     – தொல்.பொருள். 579
எனும் நூற்பாவில் கூறியமைபோல் குறுந்தொகையில் களிறு எனும் ஆண்பாற்பெயர் 32 இடங்களில் பயின்றுவந்துள்ளமை அறியப்பெறுகின்றன. அப்பதிவு ஐந்திணைகளிலும் இடம்பெற்றுள்ளன.
       இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 10 இடங்களினும் முல்லை நெய்தல் பாடல்களில் ஓரிடத்திலும் மருதப்பாடல்களில் இரு இடங்களிலும் பாலைப் பாடல்களில் 8 இடங்களிலும் அமைந்துள்ளன.
பெண்பாற்பெயர் (பிடி, பெட்டை)
          பெண்பாற் பெயர்களாக பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்ற பதின்மூன்று பெயர்களாக அமைவன என்பார் தொல்காப்பியர்.  இவற்றுள் யானைக்குரிய ஆண்பாற் பெயர்களைப் பின்வரும் நூற்பா சுட்டுகிறது. அந்நூற்பா வருமாறு:
                பிடியென் பெண்பெயர் யானை மேற்றே                          தொல்.பொருள்.596
இப்பாடலடியில் பிடி என்பது யானைக்குரிய பெண்பாற்பெயராக அமைந்தமை அறியப்பெறுகின்றது. இப்பெயர் குறுந்தொகையில் பன்னிரு இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 7 இடங்களிலும், முல்லைப் பாடல்களில் ஓரிட்த்திலும் பாலைப் பாடல்களில் 4 இடங்களிலும் அமைந்துள்ளன. மருதம், நெய்தல் ஆயிரு திணைப் பாடல்களில் இடம்பெற்றமைக்குத் திணைசார் வாழ்வியல் காரணமாக அமையலாம்.
படைப்பு நோக்கம்
                சங்கப் புலவர்கள் யானையைப் படைத்தமைக்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். அவை: அன்பைப் புலப்படுத்தும் முகமாக, சுற்றத்துடன் இணைந்து வாழும் பாங்கு மக்களிடமும் அமைதல் வேண்டுமென வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. பாலை பாடல்களில் இவ்விரு தன்மைகள் இடம்பெற்றுள்ளன. பெண் யானையின் பசியை நீக்குவதற்காக ஆண் யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை, பெண்யானையைப் பருகச் செய்வது அன்பைப் புலப்படுத்துவதாகவும்; பாலை நிலத்தில் வளர்ந்த யாமரங்களின் அடிப்பகுதியில் குத்தித் தன் பெரிய சுற்றத்தின் பசியைத் தீர்ப்பதாகவும் அமைந்துள்ளன(நித்தியா அறவேந்தன், பழந்தமிழகத்தில் வறுமையும் வளமையும்,பக்.3-4) என்று குறித்திருப்பதும் கவனத்திற்குரிய ஒன்றாகும். இதனைக் குறிக்கும் பாடலடிகள் வருமாறு:
                பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
                மென்சினை யாவும் பொளிக்கும்                                        குறுந்.37:2-3
என்று பிடிபசியைத் தீர்க்கும் அன்புறு காட்சியும்,
                சிறுகட் பெருநிரை உறுபசி தீர்க்கும்                  குறுந்.255:4
என்பது களிறு சுற்றத்தின் பசியைத் தீர்க்கும் அன்புறு மற்றும் கடமையுணர் காட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் பாலைப் பாடல்களில் யானையது பசியின் கொடுந்தன்மை இடம்பெற்றுள்ளன. அவை குறுந்.37, 79, 202, 255 ஆகிய பாடலடிகளில் இடம்பெற்றுள்ளை அறியப்பெறுகின்றன. சான்றாக,
                கான யானை தோல்நயந்து உண்ட
                பொரிதால் ஓமை வளிபொரு நெடுஞ்சினை     குறுந்.79:1-2
என்பதாகக் குறிப்பிடப் பெறுகிறது. இவ்வடியில் பாலைநிலத்தில் நீரின்மையால் ஓமை மரத்தின் மரப்பட்டையை உரித்து உண்ணும் பசியின் கொடுந்தன்மை இடம்பெற்றுள்ளது. இத்தன்மைகள் சங்க மக்களின் வறுமைநிலையை மறைமுகமாக எடுத்தியம்புவதாகவும் அமைந்துள்ளன.
                யானைகள் குன்றுகளிலும் மலைகளிலும் சோலைகளிலும் காடுகளிலும் வழும் தன்மையுடையன (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், பக்.278-279) என்பார் பி.எல்.சாமி. அத்தன்மையைக் குறுந்தொகைப் பாடலடியொன்று எடுத்தியம்புகிறது. அப்பாடலடி வருமாறு:
                சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
                தொல்முரண் சோரும் துன்னருஞ் சாரல்                           குறுந். 88:2-3
என்ற அடியில் நெடுநாள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் யானைகள் வாழுமிடமாக துன்னருஞ் சாரல் இடம்பெற்றுள்ளது. இதுபோல் அமைந்த பாடலடிகளில் குறிஞ்சிநில மக்களின் வாழ்வியற் சார்புகளை காணமுடிகின்றது.
                சங்க மக்களின் வளமை, வறுமை, சமுதாயச் சார்பு, அன்பு வெளிப்படும் தன்மை, வாழிடம் ஆகியன்வற்றை எடுத்தியம்புவதாக யானை எனும் கருப்பொருள் இடம்பெற்றுள்ளது.
தொகுப்புரை
·         பொதுப்பெயர், இளமைப்பெயர்,ஆண்பாற்பெயர், பெண்பாற்பெயர் என்ற பாகுபாட்டில் யானை பற்றிய பதிவுகள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.
·         பொதுப்பெயர் அதிக அளவில் பாடப்பெற்றுள்ளன.
·         களிறு பற்றிய பதிவே குறுந்தொகை ஐந்திணைகளிலும் இடம்பெற்றுள்ளன.
·         யானைக் கருப்பொருள் வழி சங்க மக்களின் வாழ்வியற் கூறுகளை அறியமுடிகின்றது.
 (இக்கட்டுரை ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலை அறிவியல் கலைக் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்க் வசிக்கப்பெற்றதும், வெளியிடப்பெற்றதுமாகும் - 2010)
          

காற்றும் அதன் மருத்துவக் குணமும்


42ஆம் பாடம்
வடக்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்கு, வாடை என்றும், வடகாற்று என்றும் பெயர்.
தெற்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குத், தென்றல் என்றும், தென்காற்று என்றும் பெயர்.
தென்றற் காற்று, உடம்புக்கு ஆரோக்கியத்தைத் தரும்; அது சித்திரை, வைகாசி மாதங்களில் வீசும்.
கிழக்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குக் கொண்டல் என்றும், கீழ்காற்று என்றும் பெயர்.
மேற்குத் திக்கில் இருந்து வீசுகிற காற்றுக்குக் கோடை என்றும், கச்சான் என்றும், மேல் காற்று என்றும் பெயர்.
-       பாலபாடம், 2003:35 – 36

திசைகள்


41ஆம் பாடம்
திக்கு நான்கு, அவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு.
சூரியன் உதிக்கின்ற திக்குக்குப் பெயர் கிழக்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு வலப் பக்கமாகிய திக்குக்குப் பெயர் தெற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு பிற்பக்கமாகிய திக்குக்குப் பெயர் மேற்கு.
கிழக்கு முகமாக நிற்கிறவருக்கு இடப்பக்கமாகிய திக்குக்குப் பெயர் வடக்கு.
தெற்கும் கிழக்குமாகிய மூலைக்குப் பெயர் தென்கிழக்கு.
தெற்கும் மேற்குமகிய மூலைக்குப் பெயர் தென்மேற்கு.
வடக்கும் மேற்குமாகிய மூலைக்குப் பெயர் வடமேற்கு.
வடக்கும் கிழக்குமாகிய மூலைக்குப் பெயர் வடகிழக்கு.
-       பாலபாடம், 2003:35

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

தூய்மை

                                            35ஆம் பாடம்

நித்தமும் வேட்டியை நன்றாகத் தோய்த்து அலப்பிப் பிழிந்து, உலரப் போடு.
உடம்பில் அழுக்கைத் தேய்த்து ஸ்நானம் பண்ணு.
நெடுநேரம் சலத்திலே நில்லாதே.
உடம்பு வெயர்க்கும் பொழுது ஸ்நானம் பண்ணாதே.
ஸ்நானம் பண்ணின உடனே, சூடு பிறக்கும்படி, ஈரத்தைக்(த்) துவட்டிப் போடு.
தோய்த்து உலர்ந்த சுத்த வஸ்திரம் தரித்துக் கொள்.
அழுக்கு வேட்டியாவது, ஈரவேட்டியாவது, தரியாதே.
சனிக்கிழமை தோறும், எண்ணெய் தேய்த்துக் கொண்டு தலை முழுகு.
எப்பொழுதும் உடம்பும், வஸ்திரமும் சுத்தமாய் இருந்தால், வியாதி உண்டாகாது.         - பால பாடம், 2003:32, 1959:23-24, 1950:23-24

ஸ்நானம் - குளியல்
வஸ்திரம் - ஆடை, துணி

இது செய் இது செய்யாதே

                                             34ஆம் பாடம்
பகலிலும் விடியற் காலத்திலும் நித்திரை பண்ணாதே.
இரவில், ஒன்பது மணிக்குப் பின்பே, நித்திரை பண்ணு.
நித்தமும், விடியுமுன், நித்திரை விட்டு எழுந்துவிடு.
நித்திரை விட்டு எழுந்த உடனே, கடவுளைத் தோத்திரம் பண்ணு.
பல் விளக்கி, நாக்கு வழித்து, வாய் கொப்பளித்து, முகம் கை கால், கழுவி, ஈரந் துவட்டு.
நின்றுகொண்டாவது, நடந்துகொண்டாவது, பல் விளக்கலா காது.
புத்தகத்தை எடுத்துப் புதுப் பாடத்தையும், பழம் பாடங்களையும் படி.
                                    - பாலபாடம் 1950:22-23, 1959:22-23, 2003:32
                                                                                                               

புதன், 21 ஆகஸ்ட், 2013

நாட்கணக்கு முறை

33ஆம் பாடம்

ஒரு காலை தொடங்கி மற்றைக் காலை வரையும் உள்ள காலம் ஒரு நாள்.
ஆங்கிலேயர்கள், ஒரு நாளை, இருபத்து நான்கு மணிநேரமாகப் பிரித்திருக்கிறார்கள்.
இந்தியர்கள், ஒரு நாளை, அறுபது நாழிகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
முப்பது நாழிகை பன்னிரண்டு மணி.
பதினைந்து நாழிகை ஆறு மணி.
ஏழரை நாழிகை மூன்று மணி.
ஐந்து நாழிகை இரண்டு மணி.
இரண்டரை நாழிகை ஒரு மணி.
ஒன்றேகால் நாழிகை அரை மணி.
ஏழு நாடகள் கொண்டது ஒரு வரம்.
ஒரு வாரத்திலே, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்(ம்), வெள்ளி, சனி என்னும் ஏழு நாட்கல் உண்டு.
நாலு வாரம் கொண்டது ஒரு மாதம்.
பன்னிரண்டு மாதம் கொண்டது ஒரு வருஷம்.
                                       - பால பாடம் 1950:22, 1959:22, 2003:31-32 

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா



பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றிய சில குறிப்புகள்
பிறப்பு: 26.7.1933                    இறப்பு: 2. 12. 2008




          18.06.64 ஆம் ஆண்டு இராஜபாளையம் காந்தி கலைமன்றத்தில் தவத்திரு. குன்றக்குடி அடிகளாரால்  பன்மொழிப்புலவர் என்னும் பட்டம் அளித்துச் சிறப்பிக்கப் பட்டவரே மு.கு.ஜகந்நாதராஜா. அக்காலத்தில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டவர். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்க எத்தனையோ நல்லறிஞர்கள் பல்வேறு வகையிலும் தொண்டு செய்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகத் திகழ்ந்தார் மு.கு.ஜகந்நாதராஜா.
இவர் தானாகவே தெலுங்குமலையாளம்கன்னடம்,சம்ஸ்கிருதம்பாலிபிராகிருதம்ஹிந்திஆங்கிலம் முதலிய மொழிகளைக் கற்று அனைத்திலும் இலக்கியஇலக்கணப் புலமை பெற்று கவி எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். 
            திருக்குறள்புறநானூறுகுறிஞ்சிப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களைத் தெலுங்கிலும் (இவர் மொழிபெயர்த்த திருக்குறளையும்புறநானூற்றையும் தெலுங்கு பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது)முத்தொள்ளாயிரம் நூலைத் தெலுங்கு,மலையாளம்கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஆக்கம் செய்து அவரே வெளியிட்டுள்ளார். 
            பிராக்கிருத மொழிப் பேரிலக்கியம் "காதாசப்தசதி". இவ்விலக்கியத்தைக் குறுந்தொகை போலவே பாடல்களாக மொழியாக்கம் செய்துள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக "தமிழும் பிராகிருதமும்" என்ற ஆய்வு நூல் எழுதினார்.
            இவரைப் போல ஒரு பன்மொழி ஆய்வாளர்இலக்கிய அறிஞர்,தத்துவ மேதைதென்னிந்தியாவிலேயே இல்லை என்று பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். படைப்புலகப் பிதாமகன்பல எழுத்தாளர்களின் செவிலித்தாய்பலரையும் உருவாக்கிய பண்பாளர் என்றெல்லாம் பலவாறு பாராட்டப்பட்டவர். 
            "ஆதர்ஸ் கில்ட் ஆப் இந்தியா" என்ற அமைப்பின் மாநாடுகள்,புதுதில்லிலக்னெளஐதராபாத்து போன்ற நகரங்களில் நடந்தபோது,அங்கிருந்த தமிழ்ச் சங்கங்களில் பங்கேற்று பல ஆய்வுரைகளை நிகழ்த்தினார். இதனால் பல்கலைக் கழகங்கள் ஜகந்நாதராஜாவை அழைத்துச் சிறப்பித்தன. 
இச்சிறப்புமிகு பன்மொழிப்புலவர் 1958ஆம் ஆண்டுபூவம்மா என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். அவர்களுக்கு மூன்று மகன்கள்ஒரு மகள் உள்ளனர். 
            மணிமேகலை இலக்கியத்தில் ஜகந்நாதராஜாவுக்கு இருந்த ஈடுபாடு காரணமாகப் பல ஆய்வுகளைச் செய்தது மட்டுமல்லாமல், 1958இல் மணிமேகலை மன்றம் ஒன்றைத் தோற்றுவித்தார். அம்மன்றம்ஆக்கப்பூர்வமான பல இலக்கியப் பணிகளைச் செய்து,சென்ற ஆண்டு பொன்விழாவும் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.  இலக்கிய ஐயப்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பல அறிஞர்கள் ஜகந்நாதராஜாவைக் காண வருவார்கள். அவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகிஅவர்களின் ஐயப்பாடுகளை நீக்கி அனுப்பிவைப்பார்.  தன்னிடம் இருந்த நூல்களை (பல்வேறு மொழி இலக்கிய ஆய்வு மற்றும் தத்துவ நூல்கள்) தனி நூலகமாக ஆக்கினார்.
            "ஜகந்நாதராஜா இலக்கியத் தத்துவ ஆய்வு நூலகம்" என்ற பெயரில் இன்றும் அந்நூலகம் அவரது மருமகனார் டாக்டர் இராதாகிருஷ்ண ராஜாவால் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் அனைத்து நூல்களும் இடம்பெற்றிருக்கும். இராமாயணம் எத்தனை மொழிகளில் வெளிவந்ததோ அவை அனைத்தையும் இந்நூலகத்தில் காணலாம். இந்நூலகத்தின் மூலம் தொடர்ந்து பல ஆய்வறிஞர்கள் பலன் பெற்றுச் செல்கின்றனர்.  80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிகுடியரசுத் தலைவர் பரிசு மற்றும் மலேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் போன்றவற்றைப் பெற்றுள்ளார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. 
பன்மொழிப் புலவரின் படைப்புகளில் சில வருமாறு:
1.    கற்பனைப் பொய்கை(கவிதைத் தொகுப்பு), 1972, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
2.    தரிசனம்(வசன கவிதை),1972, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
3.    காவிய மஞ்சரி(குறுங்காவியங்கள்), 1986, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்.
4.    சிலம்பில் சிறுபிழை(இலக்கியத் திறனாய்வு), 1968, விசுவசாந்தி பதிப்பகம்,


இராஜபாளையம்.
5.    வான் கலந்த வாசகங்கள்(வானொலி உரை), 1980, மணிமேகலை மன்றம்,


இராஜபாளையம்.
6.    தமிழும் பிராகிருதமும், 1992, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
7.    மணிமேகலை ( இவர் இராஜபாளையத்தின் மணிமேகலை மன்றத் தலைவர்), மணிமேகலைமன்றம், இராஜபாளையம்.
8.    இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம், 1994, நர்மதா பதிப்பக‌ம், 


சென்னை.
9.     வடமொழி வளத்துக்குத் தமிழரின் பங்கு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை .‍
10. தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள், 2005, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
11. ஆபுத்திர காவியம்
12. தெரு  புதுக் காவியம்
13. பிஞ்சுக் கரங்கள்
14. ராஜுக்கள் சரித்திரம்
15. திராவிட மொழிகளில் யாப்பியல்
16. கவித்தொகை
17. அறிவுக் கதம்பம் (வானொலி உரை), 1993, மணிமேகலை மன்றம், இராஜபாளையம்

மொழிபெயர்ப்புகள்
1.    கன்யா சுல்கம், 1963, பாரி நிலையம், சென்னை.
2.    சேரி , 1984, சாஹித்ய அகாடமி, டெல்லி
3.    ஆமுக்த மால்யத, தெலுங்குப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்
4.    வேமனா, 1992, பாரி நிலையம், சென்னை
5.    களாபூரணோதயம் (தெலுங்கு காவியம்)தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு
6.    சுமதி சதகம்
7.    தேய்பிறை
8.    கந்துகூரி வீரேசலிங்கம் கட்டுரைகள்
9.    காதா சப்த சதி , 1981, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
10. வஜ்ஜாலக்கம் (பிராகிருத மொழி அறநூல்)2005, தமிழினி, சென்னை 14
11. கர்பூர மஞ்சரி (பிராகிருத மொழி நாடகம்)
12. சன்மதி சூத்திரம் (சமண தத்துவம்)
13. தீகநிகாயம் (பௌத்த தத்துவம்), சுந்தர நிலையம், சென்னை
14. உதானம் (பௌத்த தத்துவம்)
15. மிலிந்தா பண்ஹா (பௌத்த தத்துவம்) (மினாந்தரின் கேள்வி)
16. விக்ஞப்தி மாத்ரதா சித்தி (பௌத்த தத்துவம்)
17. ஔசித்ய விசாரசர்ச்சா வடமொழித் திறனாய்வு நூல், 1989, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
18. நாகானந்தம் வடமொழி நாடகம் (1992, பீக்காக் பதிப்பகம், சென்னை
19. குந்தமாலா வடமொழி நாடகம்
20. சாணக்ய நீதி வடமொழி நீதிநூல் 1986, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
21.  சாருசர்யா வடமொழி நீதிநூல்
22. சாதன ரகசியம் வேதாந்த நூல்அனுபவானந்த கிரந்தமாலா, பாபட்லா (ஆந்திரா)
23. சிவசரணர் வசனங்கள்
24. பம்ப்ப பாரதம் (கன்னட காவியம்)
25. பிரேம கீதம் மலையாளக் கவிதை
26. மகாயான மஞ்சரி, 2007, பவுத்தக் கல்வி மையம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வருமாறு:
1. சைல கீதமு (குறிஞ்சிப்பாட்டு), விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்

2. முத்யால ஹாரமு (முத்தொள்ளாயிரம்), விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்
3. பாரதி சமகாலீன பாவமுலு, சாகித்ய அகாதமி
4. புண்யக்ஷேத்ராலு 1989, திருமுறைத்தலங்கள் வெளியீட்டுக்குழு, பெங்களூர்
5. திருக்குறள் தேடகீதுலு
6. தமிழ காவியாம்ருதம்
7. வெலி நாணூறு (புற நானூறு)
8. முத்தொள்ளாயிரம் (மலையாளம்)
9. முக்த ஹார (கன்னடம்)

பார்வை